×

கீழடி தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை ‘தமிழும்… திமிலும்… ’ தமிழரின் பேரடையாளம்: நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி பதிலடி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில், ‘ஏறு தழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். தீய உள்நோக்கம் கொண்ட பிரிவினைவாதம். புராணமும், இதிகாசமும் ஜல்லிக்கட்டுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நிர்மலா சீதாராமனின் பதிவு கண்டனத்திற்குரியது. ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலாசாரம். இதை அவர் திரித்து புராணம் இதிகாசத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறி திசை திருப்பும் வேலையை செய்கிறார். அவரது இந்த செயல்பாடு மூலம் பிரிவினைவாத அரசியலை செய்கிறார். ஏற்கனவே அவர் தமிழக கோயில் சொத்துகள் கொள்ளை போவதாக தவறான தகவல்களை தெரிவித்தார். கீழடி அகழாய்வில் தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு மத வழிபாட்டுக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் கீழடி ஆய்வு தளத்திற்கு ஒன்றிய அமைச்சர்கள் வருகை திட்டமிட்டே தவிர்க்கப்படுகிறது. தமிழ் சமூகத்தின் ஆணிவேர் கீழடி. உலகம் அதிர உரக்கச் சொல்வோம்… கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை தமிழும் திமிலும் எமது பேரடையாளம்’’ என்றார்.

The post கீழடி தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை ‘தமிழும்… திமிலும்… ’ தமிழரின் பேரடையாளம்: நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Keezhadi ,Alanganallur Vadivasal ,Madurai ,Nirmala Sitharaman ,Union Finance Minister ,Jallikattu ,Eru Amlaam ,Keezadi ,Alankanallur Vadivasal ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி